திருவாரூர் மாவட்டம் கெராடாச்சேரி ஒன்றியம் காட்டூர் பகுதியிலுள்ள பாரதி முதியோர் இல்லத்தில் 21 முதியோர்களும் அம்மையப்பன் பகுதியிலுள்ள சேவாயோகா மாணவர் மற்றும் முதியோர் இல்லங்களில் 45 முதியோர்களும் மற்றும் 4 மாணவர்களும் பராமரிக்கப்பட்டுவருகின்றனர்
இம்முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் முதியோர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள்உணவு மருத்துவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்கள் சமையல்கூடம் குளியலறை முதியோர்களை பராமரித்துவருவது தொடர்பான பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

தொடர்ந்து கொரடாச்சேரி ஒன்றியம் இலவங்கார்குடி ஊராட்சி பகுதியிலுள்ள அங்கான்வாடி மையத்தில் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு குறித்தும் குழந்தைகளின் உயரம் எடை குறித்து குழந்தைகளை பரிசோதிக்கும் முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

விளமல் ஊராட்சியில் வட்டார வள மையத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதை பார்வையிட்டு குழந்தைகளுக்கு சுகாதாரத்துடனான உணவினை தயாரித்து வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பயிற்சி பெறும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்
அதனைத்தொடர்ந்து தண்டலை ஊராட்சியிலுள்ள குழந்தைகள் மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கப்படும் சமையலறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் குறுங்காடுகள் அமைப்பதற்கு மரக்கன்றுகளை நட்டு மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்கள் நிகழ்வில்வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன்மத்திய பல்கலை கழக பதிவாளர் சுலோச்சனா சேகர் குறுங்காடு கண்காணிப்பு அலுவலர் முனைவர்ரமேஷ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *