புதுவை ஜிப்மரில் ரோபாட் துணையுடன் ஆயிரத்து 300 அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து ஜிப்மர் அறுவை சிசிக்சை டாக்டர்களை கவர்னர் தமிழிசை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். டாக்டர்கள் மத்தியில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:- ரோபாட் துணையுடன் அறுவை சிகிச்சை முதலில் வெளிநாடுகளில் செய்யப் பட்டு வந்தது. தென்னிந்தி யாவில் அதிகளவு ரோபாட் மூலம் அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவமனையாக ஜிப்மர் உள்ளது. சரியாக என்ன செய்ய வேண்டுமோ அதை ரோபோட் மூலம் செய்யலாம். தவறில்லாமல் நேரடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். குறைவான கீறல் சிகிச்சைக்கு போதும். ரத்தம் வீணாவது மிக குறையும். குறைந்தநாள் மருத்துவ–மனையில் இருந்தால் போதும். விரைவில் சாதாரண வார்டுக்கோ, வீடுக்கோ திரும்ப லாம். சாதா–ரண வாழ்க்கை முறைக்கு எளிதில் திரும்ப முடியும். ஜிப்மரில் இதற்காக ரூ.26 கோடி சாதனங்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. புதுவை, தமிழகம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்து 300 ரோபாடிக் சர்ஜரி 5 ஆண்டுகளில் நடந்துள்ளது. உயரிய சிகிச்சை செய்தாலும் தேடி வரும் மக்கள் மகிழ்வுடன், திருப்தியுடன் இருக்கும் வகையில் ஜிப்மர் நிர்வாகத்தின் நடவடிக்கை இருப்பது அவசியம். இவ்வாறு தமிழிசை பேசினார். இதன்பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:- ஜிப்மரில் 8 துறைகளில் 20 டாக்டர்கள் ரோபாட் துணையுடன் அறுவை சிகிச்சை செய்கின்றனர். சிறுநீரகவியல், புற்றுநோய் பிரிவுகளில் அதிக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஜிப்மரில் மக்கள் மருந்தகத்துக்கு வரும் 12ம்தேதி டெண்டர் திறக்கப்பட உள்ளது. தமிழ் தெரிந்த மக்கள் தொடர்பு அலுவலர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். மக்களுக்கான ஆம்புலன்ஸ் இயக்குவதில் நிர்வாக ரீதியான பல பிரச்சினைகள் இருக்கிறது. மக்களுக்கு எங்கேயும் கிடைக்காத சிகிச்சைகள் இங்கு கிடைப்பதை பதிவு செய்ய வேண்டும். நம் மொழி எப்போதும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம். தமிழுக்கு பிரதான முக்கியத்துவம் தந்துவிட்டு தான் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாற்றத்துக்கு ஒத்துக்கொண்டோம். மத்திய அரசிடம் இதை தெரிவித்துள்ளோம். தமிழ் எப்போதும் சி.பி.எஸ்.இயில் இருக்கும். சி.பி.எஸ்.இ. கூடாது என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன். தமிழகத்தில் தமிழில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெறாமல் உள்ளதையும் பார்க்க வேண்டும். கல்வியில் மக்கள் மேம்பட வேண்டும். புதுவை கல்வி புரட்சியை பார்க்க உள்ளது. உலக அரங்கில் சிறந்த கல்வியை பெற்று மிகப்பெரிய பலனை குழந்தைகள் பெற போகிறார்கள். மத்திய அரசு கட்டுப்பாட்டுகளை தளர்த்தி கொடுத்ததால், புதுவை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ கொண்டு வந்துள்ளோம். சி.பி.எஸ்.இயில் புதுவை, காரைக்காலில் தமிழும், மாகேயில் மலையாளமும், ஏனாமில் தெலுங்கும் இருக்கும். புதுவையில் தமிழ் இல்லாமல் இருக்காது. தமிழ் கட்டாயம் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மருத்துவ கல்லூரி அங்கீகாரத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளதே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கவர்னர் தமிழிசை, தமிழ்நாட்டில் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தில் பாரபட்சம் செய்வதாக சொல்கிறார்கள். புதுவையில் என்ன ஆட்சி நடக்கிறது? புதுவையிலும் அங்கீகாரம் ரத்தானது. உண்மையில் மத்திய அரசு பாரபட்சம் இல்லாமல் செயல்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இல்லை, புதுவையிலும் அங்கீகாரம் ரத்து நடந்துள்ளது. மத்திய அரசின் துறைகள் தன்னிச்சயாக செயல்படுகின்றன. வருகை பதிவேடு டாக்டர்களுக்கு முக்கியம். புதுவையிலும் வருகை பதிவு கட்டாயம் என்று சொல்லியுள்ளோம். நாடு முழுவதும் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்துள்ளனர். வருகை பதிவேடு முக்கியம், டாக்டர்கள் சரியாக பணிக்கு வரவேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *