தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா உற்சாகக் கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், திமுக நகர இளைஞரணி சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக, உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அண்ணாசிலை முன்பு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், பட்டாசுகள் வெடித்தும், பிறந்தநாள் கொண்டாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, தாராபுரம் அண்ணா பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகே செயல்படும் தீபம் முதியோர் இல்லத்தில், அங்கிருக்கும் முதியோர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி, அமைச்சர் சாமிநாதன், மாநில துணை அமைப்பாளர் கயல்விழி, மாவட்ட செயலாளர் இலா. பத்மநாபன் ஆகியோரின் வழிகாட்டுதல், அறிவுறுத்தலின்படி ஏற்பாடுசெய்யப்பட்டது.

தாராபுரம் நகர திமுக செயலாளர் முருகானந்தம் தலைமையில், அவைத் தலைவர் கதிரவன் முன்னிலையில், நகர்மன்ற தலைவர் மற்றும் திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் பாப்பு கண்ணன் பங்கேற்றார்.

நகர இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், தீபம் ஆதரவற்ற முதியோர்களுக்கு ரியல் அறக்கட்டளை உதவியுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்வை நகர இளைஞரணி நிர்வாகிகள், அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர்கள் சரத்குமார், சரண்ராஜ், சஞ்சீவ், மனோஜ், சரண், வாகித் உசேன், ஜீவா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகள் கார்த்திகா–மகேந்திரன் தம்பதியினர் மற்றும் அலமேலு–வேல்முருகன் தம்பதியினர் குழந்தைகளுக்கு, நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார்.

அதேபோல், ஏழை–எளிய மக்களுக்கு உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், நகர, மாவட்ட, மாநிலத் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *