கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர்,
மக்கள் சக்தியாக உருவெடுத்து வரும் விஜய் 2026 ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக அமரவிருப்பது உறுதி என தெரிவித்துள்ளார். “என்னை அரசியலில் அடையாளம் காட்டியது எம்.ஜி.ஆர். இன்று அதேபோல் விஜய் மக்கள் மனதில் உருவாக்கிய நம்பிக்கை மிகப்பெரியது,” என்றார்.
தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார் என்றும், “மக்களுக்கு புனித ஆட்சியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் துணிந்து அரசியலுக்கு வந்துள்ளார். அந்த வழியில் நானும் இணைந்து பயணிக்கிறேன்,”என்றார்.
அதேசமயம்,இரண்டு ஆட்சிகளையும் மக்கள் தள்ளுபடி செய்ய விரும்புகிறார்கள். மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது,” என அவர் கூறினார்.
கோவையில் தன்னை வரவேற்க 4 மணி நேரம் காத்திருந்த தொண்டர்களுக்கு நன்றிதெரிவித்த அவர், “நான் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். என் பின்னால் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்,” என தெரிவித்துள்ளார்.
விஜயின் தன்னலமற்ற அர்ப்பணிப்பை குறித்து கூறிய அவர், “**ஆண்டுக்கு ரூ.500 கோடி வருமானத்தை விலக்கி, மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார் விஜய் இது புனித ஆட்சிக்கான அவரது தீர்மானத்தை காட்டுகிறது,” என்றார்.