பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் 12 – ஆம் ஆண்டு துவக்க விழா …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தமாகா அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் 12 -ஆம் ஆண்டு துவக்க விழா பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும் பாபநாசம் தெற்கு வட்டாரத் தலைவருமான எஸ்.சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.
மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சுதாகர் மூப்பனார் முன்னிலை வகித்தார்.
விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சுரேஷ் மூப்பனார் கலந்து கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.
விழாவில் மாவட்ட துணைத்தலைவர் மாஸ்கோ, பாபநாசம் வடக்கு வட்டாரத் தலைவர் விவேக், மாநில சிறப்பு அழைப்பாளர் ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர்கள் எஸ்.டி.பாஸ்கர் , ரவிச்சந்திரன் ,பாபநாசம் கிழக்கு வட்டாரத் தலைவர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் சிவ.இ.சரவணன், மாவட்ட விவசாய அணி தலைவர் முருகராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் கருண், மாவட்ட மகளிரணி தலைவர் சுகன்யா சங்கர்,மண்டல இளைஞரணி நிர்வாகிகள் விஜய் சங்கர், பாலமுருகன், அய்யம்பேட்டை நகர தலைவர் முருகராஜ், அம்மாபேட்டை வட்டாரத் தலைவர் கனகராஜ்,மாநில மண்டல மாவட்ட வட்டார பேரூராட்சி நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
முடிவில் பாபநாசம் நகர தலைவர் பக்ருதீன் அலி அகமது நன்றி கூறினார்.