திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சொசைட்டி தமிழ்நாடு மாநிலக் கிளை திருவாரூர் மாவட்ட கிளை ஜூனியர் ரெட் கிராஸ் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அப்துல் முனாப் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் மு.க பாலு ircsவரதராஜன் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர் செல்வகணபதி முன்னிலை வகித்தனர். ஜேர்ச் ஆலோசகர் ராஜா வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வினை துவக்கி வைத்தார் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு நாகப்பட்டினம் காவல் ஆய்வாளர் பிரேமா தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாணவ உளவியலாளர் கவுன்சில் இந்தியா யுவராஜ் கலந்துரையாடினார்கள்.
நிகழ்வின்போது மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சாவித்திரி தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருவாரூர் மாவட்ட கிளை ஜூனியர் ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் ராஜகுமார் பாலு நடராஜன் மணிமாறன் வெங்கடேசன் மாவட்ட வரதட்சணை தடுப்பு குழு உறுப்பினர் சங்கீதா மணிமாறன் ஒருங்கிணைப்பாளர்கள் கொரடாச்சேரி தீபன் அமைப்பின் கணக்காளர் கௌசல்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியாக ஜேரசி மண்டல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர் செந்தில்குமார் நன்றி கூறினார்.