வலங்கைமானில் வர்த்தகர் சங்க பூமி பூஜை நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் ராமர் கோயில் எதிரே வலங்கைமான் வர்த்தகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடம் பல ஆண்டு காலமாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில்,
அக்கட்டிடத்தை புதுப்பிக்க வர்த்தகர் சங்க தலைவர் குணசேகரன், செயலாளர் ராயல் திருநாவுக்கரசு, பொருளாளர் புகழேந்தி,துணைத்தலைவர் மாரிமுத்து, முன்னாள் பொருளாளர் பழனிசாமிமற்றும் நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தீவிர முயற்சியில் கட்டிடத்தை புதுப்பித்து கேட் அமைக்கும் பணிகளை துவங்கியுள்ளனர். இதற்கான பூமி பூஜை வர்த்தகர் சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் வலங்கைமான் வர்த்தகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *