P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு.தனது செய்தி குறிப்பியில் கூறியதாவது

யூரியாவுக்கு வழங்கப்படும் மானியத்தை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டித்து, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் தோள்களிலிருந்து பெரும் சுமையை இறக்கி வைத்ததற்காக, பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

2024-25 நிதியாண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கு, ரூபாய் ₹3,68,677 கோடியை, யூரியா மானியமாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சந்தை விலை ₹2200 என்ற அளவில் இருக்கும் போது, 45 கிலோ யூரியா மூட்டையை, ₹242க்கு வழங்கும் மத்திய அரசுக்கு, தமிழகவிவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அரசின் PMPRANAM திட்டம், மாநிலங்கள், மாற்று உரங்கள் மற்றும் ரசாயன உரங்களைச் சீராகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் திட்டமாகும். இயற்கை உரங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க, ₹1451 கோடியில் சந்தை மேம்பாட்டு உதவி திட்டத்தை அறிவித்துள்ளார்.

மேலும், நிலத்தில் உள்ள கந்தக பற்றாக்குறை யை நிகர் செய்ய, கந்தகம் கலந்த யூரியா விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம்.

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *