திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் நகராட்சிக்கு ₹ 3 கோடி 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு – அவசர சபைக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்
நகராட்சி துணைத் தலைவர் மறைந்த ரவிச்சந்திரனுக்கு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மௌன அஞ்சலி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகராட்சி நகர் மன்ற அவசர கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், நகராட்சி ஆணையாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.139 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேபோல் தாராபுரம் நகர் பகுதியில் உள்ள 30 வார்டுகளின் குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு, தார் சாலை, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி பணிகளுக்காக ரூ.150 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யும் தீர்மானம் கவுன்சிலர்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது.
அமராவதி ஆற்றங்கரை அருகே உள்ள நகராட்சி குடிநீர் நீரேற்று பகுதியில், மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதடைவதால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இதனை சரிசெய்ய புதிய மோட்டார்கள் வாங்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் நகராட்சி எல்லைக்குள் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் மற்றும் நகராட்சி வாகனங்கள் பழுதுபார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதல் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினராக தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர். செல்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு, சபையில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு,செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி,ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ்,திருப்பூர் நான்காம் மண்டல தலைவர் இ. ல. பத்மநாபன் ஆகியோருக்கு, நகராட்சி சபை வாயிலாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு முன்பாக நகராட்சி நகர் மன்ற மறைந்த துணைத் தலைவர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு உறுப்பினர்கள் அனைவரும் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.