கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி மேல்பகுதியில் குடியில்லாதவா்களையும், புலம் பெயா்ந்தவர்களை வால்பாறை பகுதியில் குடியிருப்பதாக காட்டி, ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் பி.எல்.ஓ. க்கள் வாக்காளர்களை நேரடியாக சென்று சந்திக்காமல் எஸ்.ஐ.ஆர். படிவங்களை தாங்களே பூா்த்தி செய்து போலியாக வாக்களர்களை சோ்த்துள்ளதாகவும் அதை கண்டித்து போலிவாக்களா்களை நீக்கம் செய்ய வலியுறுத்தி வால்பாறை அஇஅதிமுக நகர கழக செயலாளா் ம.மயில்கணேசன் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனர்
இந்நிகழ்வில் நகர துணை செயலாளா் எஸ்.பி.பொன்கனேசன், வழக்கறிஞா் பெருமாள், சண்முகவேல், சசிக்குமாா், எஸ்.கே.எஸ். பாலு, எம்.ஆர்.எஸ்.மோகன், முனீஸ், பிரமேஷ், ரொட்டிக்கடை ரமேஷ், ராஜமாணிக்கம், லோகேஸ்வரன், கவியரசன், முனீஸ், பிரமேஷ், ரொட்டிக்கடை ரமேஷ், ராஜமாணிக்கம், லோகேஸ்வரன், கவியரசன் ஆகியோா் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனா்