கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் அமெச்சூர் 2025- 26 மல்யுத்த போட்டி..
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் கரூர் மாவட்டம் வாங்கல் சாலையில் அமைந்துள்ள கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாலாவது மாநில அளவிலான அண்டர் 17 அண்டர் 20 மற்றும் சீனியர் மற்றும் முதலாவது அண்டர் 15 கடற்கரை மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி2025-26. நடைபெற்றது.
இப்போட்டிக்கு தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எம்.லோகநாதன் தலைமை வகித்தார்.
இப்போட்டியில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 260 க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.போட்டியில் வெற்றி பெற்ற வீரர்,வீராங்கனைகளுக்கு கடலூர் மாவட்டம் மல்யுத்த சங்க செயலாளர் கோடீஸ்வரன் பரிசுகளை வழங்கினார்.
இப்போட்டிக்கு நடுவர்களாக எம்.ஜெகன் குமார், கே.கணேசன், ஜி. ரஞ்சிதா ஆகியோர் செயல்பட்டனர் மேலும் இப்போபோட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயற்குழு உறுப்பினர் எம். லோகநாதன் செய்திருந்தார்.இப்போட்டிக்கு மல்யுத்த வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.