கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் வடக்கு டிவிசனில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்போது வட மாநிலத்தை சேர்ந்த சுமார் 8 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்

அம் மாணவர்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர் அல்லது சத்துணவு அமைப்பாளர் ஆகியோர் பள்ளி நாட்களில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பாதுகாப்பாக கூட்டிச்சென்று வருவது வாடிக்கையாக உள்ளது இந்நிலையில் அப்பள்ளி வனப்பகுதி அருகே இருப்பதால் அடிக்கடி யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 யானைகள் கொண்ட கூட்டம் அப்பள்ளியின் கதவு ஜன்னல்களை உடைத்து

உள்ளே புகுந்து பீரோ உள்ளிட்ட பொருட்களை இழுத்துத்தள்ளி சேதப்படுத்தியுள்ளது தொடர்ந்து ஏற்படும் இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்து மாணவர்களின் நலன் கருதி மக்கள் குடியிருப்பு பகுதியில் பள்ளியை மாற்றம் செய்துதர தொடர் கோரிக்கையும் விடுத்து வந்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்

எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பாதுகாப்பில்லாத வகையில் செயல்பட்டுவரும் பள்ளியை மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மக்கள் வசிக்கும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *