துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் வழங்கினார். கண்ணனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 119 மாணவ மாணவிகளுக்கும், சேனப்பநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 89 மாணவ மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், அண்ணாதுரை, கண்ணனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி ரவிச்சந்திரன்,சேனப்பநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமதாஸ், வீரமச்சான்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காவேரி கணேசன், கெம்பியம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி பாஸ்கர், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணனூர் குமார், நடுவலூர் செல்வகுமார், மாணவரணி பிரபாகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தமிழ் செல்வன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்