கோயம்புத்துார் மராத்தான் போட்டிக்கான முன்பதிவு துவக்கம்

இந்நிகழ்வின் 11-வது பதிப்பு டிசம்பர் 17, 2023 அன்று நடக்க இருக்கிறது

உலகம் முழுவதிலும் இருந்து 18,000 க்கும் அதிகமான ஓட்ட பந்தய வீரர்கள் கோயம்புத்தூர் மாரத்தானில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கோயம்புத்தூர் 07, ஆகஸ்ட் 2023:

கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF), வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் பவர்ட் பை எல்ஜி எக்விப்மெண்ட்ஸ் தொடங்குவதை அறிவித்தது . இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த மாரத்தானின் 11 வது பதிப்பு, முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது., நாடு முழுவதிலிருந்தும் 18,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு மற்றும் அடிக்கருத்து “LET’S KO KOVAI” என்பதாகும். 2023 ஆம் ஆண்டு பதிப்புக்கான பதிவுகளை கோவை மாவட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். காவல்துறை ஆணையர் திரு.வி. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் 21.1 கி.மீ.க்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்தி குமார் பாடி ஐ.ஏ.எஸ் 10 கி.மீ ஓட்டத்திற்கும் பதிவு செய்தனர். கார்ப்பரேஷன் கமிஷனர் திரு.எம். பிரதாப், ஐ.ஏ.எஸ் வேலை காரணத்தால் துவக்ககத்திற்கு வர முடியவில்லை என்றாலும் 21.1 கி.மீ ஓட்டத்திற்கு பதிவு செய்ததாக செய்தி தெரிவித்துள்ளார்.

பங்கேற்பாளர்கள் இப்போது www.coimbatoremarathon.com மூலம் பதிவு செய்யலாம்.

ஓட்டப்பந்தய நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாக இது இருக்க வேண்டும் என்பதற்காக CCF ஆனது, கோயம்புத்தூர் ரன்னர்ஸ் உடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்திலிருந்தே, இந்த நிகழ்வு புற்றுநோயை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு விழிப்புணர்வைப் பரப்ப மற்றும் ஆதரவளிக்க உதவி உள்ளது. இந்த நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதியானது, நோயிலிருந்து மீண்ட நூற்றுக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்தும் வகையிலான CCF இன் செயல்பாடுகளுக்கு பங்களித்துள்ளது.

இந்த நிகழ்வில் ஒரு அரை மாரத்தான் [21.1 கி.மீ], ஒரு 10 கி.மீ ஓட்டம் மற்றும் ஒரு 5 கி.மீ ஓட்டம்/நடை ஆகியவை அடங்கியுள்ளன. பதிவுக் கட்டணம் அரை மராத்தானுக்கு ரூ. 1,200, 10 கி.மீ ஓட்டத்திற்கு ரூ.1,000, 5 கி.மீ ஓட்டம்/நடைக்கு ரூ. 600 ஆகும்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனி பிரிவுகளில், பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூபாய் 2.7 லட்சத்துக்கான பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. அரை மாரத்தான் ஓட்டத்துக்கான திறந்த பிரிவில், பரிசுத் தொகையானது முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு முறையே ரூ. 25,000 ரூ. 15,000 மற்றும் ரூ. 10,000 ஆகும், அதேபோல 10 கி.மீ திறந்த பிரிவில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களில் வருபவர்களுக்கான பரிசுத் தொகையானது முறையே ரூ. 15,000 ரூ. 10,000 மற்றும் ரூ. 5,000 ஆகும்.

45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வெடரன்களுக்கு, அரை மாரத்தான் ஓட்டத்திற்கு முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவதாக வருபவர்களுக்கு பரிசுத் தொகை முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகும். 10 கி.மீ ஓட்டத்திற்கு 7,500 மற்றும் 5,000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *