சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்.

சென்னை கொளத்தூர் செய்தியாளர்

    சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான தற்காப்பு கலையான கராத்தே போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் உள்ள குருச்சேத்திரா பல்கலைக்கழகத்தில் 25.08.2023 முதல் 27.08.2023 வரையில் நடத்தப்பட்டன.  

அப்போட்டியில் ஏழு பேர் கலந்து கொண்டு அனைவரும் பதக்கங்களை வென்றனர்.
அதில் 3 தங்கப்பதக்கங்களும், 1 வெள்ளி பதக்கமும், 3 வெங்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளனர். புழல் மத்திய சிறையில் பணியாற்றும் சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் 5 பதக்கங்களையும், மதுரை மத்திய சிறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் 2 பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

காவல்துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரி சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் பதக்கங்களை வென்ற சிறைப் பணியாளர்களின் வாரிசுகளை நேரில் அழைத்து பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஐ.ஜி இரா .கனகராஜ், , சிறைத்துறை டி.ஐ.ஜி, ஆ .முருகேசன் ஆகியோரும் உடன் இருந்தனர். பயிற்சி அளித்த முதல் நிலை காவலர் எஸ்.ராஜரத்தினம், முதல் தலைமை காவலர், பி.மாரிசெல்வம், பயிற்சி ஆசிரியர் ராஜேஷ்வரன் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர் ஆர்.பவானி ஆகியோருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *