பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் பேரூராட்சியில் வணிகர் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு ஆர்ப்பாட்டம்….
வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் சுமூக தீர்வு….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் வணிகர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் முழு கடையடைப்பு கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிருத்திருந்தனர்.
இதுகுறித்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா,சுகாதார ஆய்வாளர் பரமசிவம், பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு,மண்டல துணை வட்டாட்சியர் அகிலா, வருவாய் ஆய்வாளர் பூங்குயில் , கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், பாபநாசம் வணிகர் சங்க தலைவர் குமார்,செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் ராமராஜ், கும்பகோணம் வணிகர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் சத்தியநாராயணன், குடந்தை நகர துணைத் தலைவர் அண்ணாத்துரை, பேரூர் செயலாளர் கபிலன், பேரூராட்சி கவுன்சிலர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது….
பிளாஸ்டிக் பையின் தரத்தினை தமிழக அரசால் நிர்ணயம் செய்துள்ள அளவினை 15.13.2025 க்குள் முழுமையான அளவில் கடை பிடிக்க வேண்டும். மேலும் அதற்கு மேல் 31.12.2025 க்குள் கேரி பேக்கின் தரம் குறைவாக உள்ளது என கண்டறியப்பட்டால் நோட்டீஸ் சார்வு செய்திட வேண்டும்.01.01.2026க்கு பிறகு முழுமையான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,
பி.பி. பேக்கின் தமிழக அரசால் நிர்ணயம் செய்துள்ள மைக்ரான் அளவினை முழுமையாக கடைப்பிடித்திட வேண்டும் தற்பொழுது 55 சதவீத மைக்ரான் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் சில உணவகங்கள் மற்றும் டீக்கடையில் பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்களை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.
சாலை ஓர ஆக்கிரப்புகளை பாபநாசம் பேரூராட்சி மூலம் நோட்டீஸ் சார்வு செய்து ஆக்கிரப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். 7
மினி பேருந்துகள் அனைத்தும் பாபநாசம் புதிய பேருந்து நிலையம் வந்து சென்றிட கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கழிவு நீர் கால்வாய்கள் அமைப்பது தொடர்பாக நெடுஞ்சாலை துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இரு தரப்பினர்களும் ஒத்துக்கொண்டதால் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் சுமூகமாக நிறைவுப்பெற்றது.
அதனை தொடர்ந்து நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் முழு கடையடைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.