உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் கண்டு ரசித்தனர்…

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10 ந்தேதி வரை உலகளவில் உலக விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது…

இந்நிலையில் உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு சதீஷ் தவான் விண்வெளி மையம், இஸ்ரோ,மற்றும் கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து விண்வெளி கண்காட்சி மற்றும் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா கல்லூரியின் தலைவர் வாசுகி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆண்டிற்கான ‘விண்வெளி மற்றும் தொழில்முனைவு.’ எனும் தலைப்பில் நடைபெற்ற இதில்,இஸ்ரோ துணை இயக்குனர் கிரஹதுரை,மேக் கண்ட்ரோல் நிறுவனத்தின் தலைவர் அத்தப்பா மாணிக்கம்,நிகழ்ச்சியின் தலைவர் சுப்பானந்தம் உட்பட விஞ்ஞானிகள், பல்கலைகழக பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகளிடையே உரையாடினர்…

மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் பயன்பெறும் விதமாக .விண்வெளி தொடர்பான காணொலி காட்சிகள், கண்காட்சி நடைபெற்றது.. கண்காட்சியில் விண்வெளி நடவடிக்கைகள் தொடர்பான மாதிரிகள்,ராக்கெட்டுகள் மற்றும் விண்வெளி குறித்த பல்வேறு தகவல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன..

விண்வெளி தொடர்பான அறிவியல் கண்காட்சியை,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..இதே போல பள்ளி மாணவ,மாணவிகளுக்கென விண்வெளி அறிவியல் தொடர்பான பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டி,வினாடி வினா,ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்த உள்ளதாகவும்,இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்…

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சி துவக்க விழாவில்,அவினாசிலிங்கம் நிகர் நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் பாரதி ஹரிசங்கர்,என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் டாக்டர். தவமணி பழனிசாமி,பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் லவ்லினா லிட்டில் பிளவர்,கொங்குநாடு கல்லூரியின் முதல்வர் லஷ்மணசாமி,உட்பட பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *