பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சியில் பள்ளிகள், நூலகம், அங்கன்வாடி மையங்களில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சியில் இயங்கும் அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாகாளிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி – கிழக்கு ஆகிய கல்விக் கூடங்களுக்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா வருகை தந்தார்.

அப்போது மாணவர்களிடம் கல்வித் திறன் குறித்து அறிய அவர்களிடையே கேள்விகள் கேட்டார். ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து,பழுதடைந்த நிலையில் உள்ள அய்யம்பேட்டை கிளை நூலகத்திற்கு சென்று பார்வையிட்டார்.

முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பாரதிதாசன் தெருவில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிட கட்டுமானப் பணியை பார்வையிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது, அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர், பாபநாசம் வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர், பேரூராட்சி மன்றத் தலைவர் புனிதவதி குமார், அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் துளசி அய்யா, பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக் முஹம்மது அலி,தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட பொருளாளர் பொகர்தீன், அய்யம்பேட்டை பேரூர் தலைவர் வாலன் சுலைமான், பேரூர் செயலாளர் செல் அப்பா, பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல் ரஹ்மான், சுவாமிமலை பேரூர் தலைவர் புர்க்கான் அலி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக, மமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *