சீர்காழி,பூம்புகார்,கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிமூட்டம். முகப்பு விளக்குடன் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். கடும் பனிமூட்டம் காரணமாக புறவழிச் சாலையில் சென்ற சொகுசு பேருந்து தடுப்பு கட்டையில் மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபிய பயணிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில்,பூம்புகார்,திருக்கடையூர்,தரங்கம்பாடி வரையிலான சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிரித்து வந்தது.பகல் நேரத்தில் கடும் வெய்யில் அடித்தாலும் குளிர்ந்த காற்றும் வீசிவருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் பனியின் தாக்கம் அதிகரித்தது. இன்று காலை சூரியன் உதிப்பது கூட தெரியாத நிலை ஏற்பட்டு 8:30 மணியை கடந்தும் கடும் பனி பொழிவு நீடிக்கிறது. கடும் பனி பொழிவு காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.

எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் நிலவியதால் இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே ஊர்ந்து செல்கின்றன.

இந்நிலையில் சென்னையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் தனியார் சொகுசு பேருந்து சீர்காழி புறவழிச் சாலையில் அதிவேகமாக வந்துள்ளது. சாலையில் பணிகள் நடைபெற்று வருவதால் மறுபுறம் செல்வதற்கான அறிவிப்பு பலகை இருப்பது தெரியாமல் பணியின் காரணமாக தடுப்பு கட்டைக்கு உள்ளே பேருந்து புகுந்துள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் குறுக்கே சேற்றில் புதைந்து நின்றது சேற்றில் சிக்கியதால் வேகம் குறைந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். தகவல் அறிந்து வந்த சீர்காழி போலீசார் விபத்தில் சிக்கிய பேருந்தை மீட்கும் பணியை ஈடுபட்டனர்.

இதனால் சீர்காழி புறவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் பேருந்து மீட்கப்பட்டு சாலை போக்குவத்து சீரானது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *