அரியலூர் மாவட்டம் தா.பழூரில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தேர்வுசெய்யப்பட்ட
அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை விரைவாக கையகம் செய்து இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக
ஆதிதிராவிட இனமக்கள் சுமார் 250 குடும்பங்கள் வீட்டு மனையின்றி கடந்த 60-ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஒரே இடத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிறு,சிறு பன்றி குடிசைகள் போல் கட்டி நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதுடன் அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள் திட்டத்திலும் பயன்பெற முடியவில்லை.

தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள இலவச வீட்டுமனைகள் வழங்கும்
திட்டத்தை அரியலூர் மாவட்டத்தில் முதலில் செயல்படுத்திட மாவட்ட நிர்வாகத்தால் நடைமுறையில் உள்ள புலஎண் 27-60 உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை கையகம் செய்யும் பணியினை தாங்கள் நேரிடையாக சிறப்பு கவனம் செலுத்தி விரைவாக நிலத்தை கையகம் செய்து இலவச விட்டு மனைப்பட்டா வழங்க வேண்டி அப்பகுதி கிராம பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆதிதிராவிட மக்களின் வறுமை நிலையறிந்து கையகம் செய்ய உள்ள நிலத்தை அரசு அலுவலர்கள் நேரடியாக பார்வையிட்டு பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் அலுவலர்கள் செயலில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

இதில் மார்க்சிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் சமூக ஆர்வலர்கள் மதியழகன்,
பந்தல் பரமசிவம் , தா பழூர் விசிக நகர செயலாளர்செல்வம், நகர துணை செயலாளர் சரவணன், கிராம பொதுமக்கள் கணேசன், நாகூரான் வினோத் தனபாக்கியம், அரசாயி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *