செங்கோட்டையிலிருந்து இயக்கப்பட்ட அரசு பேரூந்துகளை மீண்டும் இயக்க வழக்கறிஞா் ஆ.வெங்கடேசன் கோரிக்கை .

செங்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனையில் இருந்து நாள்தோறும் திருச்சி, திருப்பூர்,குமுளி, கோவில்பட்டி, ராமநாதபுரம் ஆகிய வழித்தடங்களில் முறையே 622 ஏ, 617 -டி 609 -ஏ, 163 -எச் 676 என அரசு பேரூந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாள்தோறும் இயக்கப்பட்டு வந்த அரசுப்பேருந்துகளை நிர்வாக காரணங்கள் என்ற பெயரில் வேறு பல வழித்தடங்களில் இயக்கிக் கொண்டிருப்பதனை திரும்ப பெற்றிடவும், அத்தகைய பேருந்துகளை மீண்டும் செங்கோட்டையிலிருந்து பழைய வழித்தடங்களில் இயக்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நகர திமுக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செங்கோட்டை பணிமனை
கிளை மேலாளர் சிவக்குமாரிடம் செங்கோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீர்முகம்மது, மணிகண்டன், மத்திய சங்க தலைமை நிலைய செயலாளர் ரவீந்திரன், வார்டு கழக செயலாளர்கள் சேட் என்ற சேக்மதார், மாரி, திவான், தொமுச நிர்வாகிகள் செயலாளர் திருப்பதி, தலைவர் சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சார்லஸ் பர்னபாஸ், ஆறுமுகம் மற்றும் தொமுச உறுப்பினர்கள் சரவணன், ஜாகிர்உசேன், திருப்பதி, அழகுசுந்தரம், சாகுல் ஹமீது, சீனிவாசன், செல்வகுமார், கனகராஜ், ரவீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செங்கோட்டை நகர மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பயணிகளின் அத்தியாவசிய தேவைகளை, நலன்களை கவனத்தில் கொண்டு பழைய வழித்தடங்களில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்த அப் பேருந்துகளை மீண்டும் இயக்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *