அய்யம்பேட்டையில் சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் உறுதிமொழி நிகழ்ச்சி…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி நிகழ்ச்சி கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர்.மில்டன்ராஜ், சாலை பாதுகாப்பு உறுதிமொழி பற்றி அறிமுகம் செய்து வரவேற்புரை ஆற்றினார்.

நாட்டு நலப்பணி திட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான முதலாமாண்டு மாணவி நந்தினி உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழியை ஏற்றனர்.

இதில் ஜோதி , கலியமூர்த்தி, இலக்கியா,
ஆங்கிலத்துறை பேராசிரியர், திருமதி.பிரதா,
கணிதத்துறை பேராசிரியர் இராமச்சந்திரன், செல்வி.திவ்யா மற்றும் பலர் கலந்துகொண்டு உறுதிமொழி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முடிவில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் அலுவலர் இலக்கியா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *