நபிகள் நாயகம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குறிய வகையில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.

திருவாரூர் மாவட்டத்தில் ரௌடிசம், கட்டப்பஞ்சாயத்து, மது விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதேபோல் சமூக வலைத்தளங்களில் பிற மதம் மற்றும் அரசியல் சார்ந்த சர்ச்சைக்குறிய பதிவுகள் வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதத்தில் சமூக வலைத்தளத்தில் கவிஞர் வைரமுத்துவின் குரலில் பேசி சர்ச்சைக்குறிய பதிவினை வெளியிட்டவர் மீதும் கொடுவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் புகைப்படங்களை பதிவிட்ட நபர் மீதும் திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்களை பற்றி அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்நிலையில் “புகுந்து விளையாடு” என்ற முகநூல் பக்கத்தில் நபிகள் நாயகத்தினை பற்றி சர்ச்சைக்குறிய வகையில் பதிவிட்ட நபர் மீது இஸ்லாம் அமைப்புகள் தங்களின் இறைத்தூதரான நபிகள் துணைவியாரை கொச்சை படுத்தும் விதமாக கருத்து பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் புகார் அளித்தனர்.

மேற்படி புகார் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட சர்ச்சைக்குறிய பதிவினை பகிர்ந்த நீலகண்டன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேற்படி நபரை கைது செய்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
மேலும் மத நம்பிக்கையை இழிவுப்படுத்தும் விதத்திலும், தேசிய மற்றும் கட்சி தலைவர்களை அவதூராக சித்தரித்தல் போன்ற சர்ச்சைக்குறிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *