ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் நேதாஜி கல்லூரியில் கருத்தரங்கு
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக மாணவ. மாணவிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்க (Natural language processing) இயற்கை மொழி செயலாக்கம் என்ற தலைப்பில் நடைபெற்றது
கருத்தரங்கிற்கு கல்லூரி கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டில் துறை தலைவி ( பொ) ஆர் ரேணுகா வரவேற்றார் கல்லூரியின் தாளாளர் தலைவர் முனைவர் வெங்கட்ராஜுலு தலைமை வகித்தார் இயக்குனர் விஜய் சுந்தரம் மற்றும் முதல்வர் முனைவர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஈ .காவேரி உதவி பேராசிரியர் அரசு கலைக்கல்லூரி ஒரத்தநாடு தஞ்சாவூர் மாவட்டம் பங்கேற்று பேசுகையில் இயற்கை மொழி செயலாக்கம் என்பது மனிதனுக்கும் மிஷினுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதற்கான உருவாக்கப்பட்டது இயற்கை மொழி செயலாக்கம் என்று கூறினார்
மேலும் செயற்கை நுண்ணறிவின் ஒரு பகுதி என்றும் இன்று நம் வாழ்க்கையில் கைபேசியில் கூகுள் மூலமாக பேசுவதும் அதை அந்த கூகுள் தாம் வாங்கிக்கொண்டு அதற்கு பதில் அளிப்பதும் அதேபோன்று வார்த்தைகளை தட்டச்சு செய்து கொள்வதும் ஒருவகையான இயற்கை மொழி செயலாக்கம் என்று கூறினார்
கருத்தரங்கில் தெளிவான முறையில் மாணவ மாணவிகளுக்கு தமது கருத்துக்களை வெளிப்படுத்தி மாணவ மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் அளித்தனர் கருத்தரங்கிற்கு கல்லூரியின் செயலர் வி. சுந்தர்ராஜ் மற்றும் முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த் ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர் மேலும் கல்லூரியின் துணை முதல்வர் (பொ) நெல்லிவனம் மற்றும் துறை சார்ந்த ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் நிகழ்வின் இறுதியாக கணினி துறை ஆசிரியர் ஹரிராஜன் நன்றி கூறினார்