ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா .
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
இன்றையதினம் நுகர்வோர் தினவிழா கொண்டாடபடுவதன் நோக்கமானது நுகர்வோர் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே நுகர்வோர் என்றால் பணம் கொடுத்து பொருளை வாங்குபவர், பணம் கொடுத்து சேவை பெறுபவர் நுகர்வோர் ஆவார் அந்த வகையில் அனைத்து குடிமக்களும் நுகர்வோரே நுகர்வோர் தினமானது நுகர்வோர் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பதாகும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நுகர்வோருக்கு சில உரிமைகளை அளிக்கிறது.
அதாவது உயிருக்கும் உடைமைக்கும் ஊறு விளைவிக்கின்ற பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக நுகர்வோர் பாதுகாக்கப்பட வேண்டும் நியாயமற்ற வணிக நடவடிக்கைகளிலிருந்து நுகர்வோர் பாதுகாப்பு பெற, பொருட்களின் தரம் அளவு வீரியம், தூய்மை நிலை, விலை ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் நியாயமற்ற வணிக நடவடிக்கைகளால் நுகர்வோர் பாதிக்கப்பட கூடாது போன்றவைகளை குறிப்பதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
மாணவ மாணவியர்கள் பாஸ்ட்புட் போன்ற உணவினை தவிர்த்து நல்ல ஆரோக்கியமான சிறுதானிய உணவினை உட்கொள்ள வேண்டும். உடல்நலம் மிக முக்கியமானது மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் எதிர்கால பொருளாதாரத்தினை உயர்த்தக்கூடிய சக்தியாகும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்
அதனைத்தொடர்ந்து உலக நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவினையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் நற்சான்றிதழ் களை வழங்கினார்
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி ஆயுதப்படை ஆய்வாளர் கோகிலா நுகர்வோர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்