திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டத்தில 2024 பிப்ரவரி மாத இயல்பான மழையளவு 42.66 மி.மீ. ஆகும் 28.02.2024 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.17 அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 66 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது அணையிலிருந்து வினாடிக்கு 1003 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது
2023-24-ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் 36,914 ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,53,808 ஹெக்டேரிலும், கோடை சாகுபடி 9,742 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 2,00,464 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,

அதில் குறுவை பருவத்தில் 19,681 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 41,101 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 9,311 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 70,093 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் 35,769 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 30,079 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 9,582 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 75,430 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது தாளடி பருவத்தில் 12,395.6 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 39,512.25 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 17,446 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 69,353 ஹெக்டேரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 39,512 ஹெக்டேரில் தாளடி அறுவடை நடைப்பெற்றது.

எனவே ஆக மொத்தம் 2,14,876 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
2023-2024ஆம் ஆண்டில் உளுந்து 36,700 ஹெக்டேரிலும், பச்சைப்பயறு 50,000 ஹெக்டேரிலும்; ஆக மொத்தம் 86,700 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், காரீப் பருவத்தில் 762 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும் ராபி பருவத்தில் 9048 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும் 8429 ஹெக்டேரில் பச்சைப்பயறு சாகுபடியும் ஆக மொத்தம் 18,239 ஹெக்டேரில் பயறு வகை பயிர்கள் செய்யப்பட்டுள்ளது

2023-2024ஆம் ஆண்டில் நிலக்கடலை 4,480 ஹெக்டேரிலும் எள் 2,530 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அதில் 1951 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடியும் 328 ஹெக்டேரில் எள் சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது மேலும், 2023-2024ஆம் ஆண்டில் பருத்தி 14,000 ஹெக்டேரிலும், கரும்பு 120 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அதில் 20 ஹெக்டேரில் பருத்தி சாகுபடியும், 88 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் 2023-2024ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சிறப்பு மற்றும் குளிர்கால (ராபி) பருவங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

திருவாரூர் மாவட்டத்தில் பயிர்காப்பீட்டுத் திட்டம் நடப்பு ஆண்டிற்கு இப்கோ-டோக்கியோ பயிர் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட எள் மற்றும் நெல் கோடை) ஆகிய பயிர்களுக்கான விவசாயிகள் பதிவு நடைபெற்றுவரும் நிலையில் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 2024 மார்ச் 15ம் தேதிக்குள் இப்பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ள படுகின்றனர்

விவசாயிகள் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் விதைப்பு சான்றிதழ் ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதையும் பெற்றுக்கொள்ளலாம் பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் (ஏக்கருக்கு எள் பயிருக்கு 208.5 மற்றும் நெல்-ஐஐஐ பயிருக்கு 529 மட்டுமே செலுத்தினால் போதுமானது.

எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும் பூச்சிநோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு மார்ச்-15-க்குள் அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி எள் மற்றும் நெல் (கோடை) ஆகிய பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டத்தில. மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்) செல்வி.கீர்த்தனா மணி (மன்னார்குடி) கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா வேளாண்மைதுறை இணை இயக்குநர் ஏழுமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லட்சுமி காந்தன் உள்ளிட்ட அரசு உயர்அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *