பொன்னேரி

கீழ் முதலம்பேடு ஊராட்சியில் ரூ1. 93 கோடி மதிப்பீட்டில் நவீன எரி வாயு தகன மேடை திறக்கப்பட்டது. இதன் பராமரிப்பு பணிகளை தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூ ண்டி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ் முதலம்பேடு ஊராட்சியில் உள்ள கவரப்பேட்டை பகுதியில் 2021-2022 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஒப் படைக்கப்பட்ட வருவாய் மானியத் திலிருந்து (சிஎஸ்பிஏஆர்) 193.20 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி துணி நூல் துறை அமை ச்சர் ஆர் காந்தி, கூடுதல் ஆட்சியர் சுப மித்ரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், கே வி உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன் ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தரா ஜன், முன்னாள் எம்எல்ஏ சி.எச். சேகர், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி வே ஆனந்தகுமார், மாவட்ட பொதுக் குழு உறுப்பினர் ப.சே. குணசேகர ன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, இந்திரா திருமலை, கீழ் முதலம் பேடு ஊராட்சி மன்ற தலைவர் கே ஜி நமச்சிவாயம்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த நவீன எரிமேடையை பராமரி ப்பு பணியினை தொண்டு நிறுவ னத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி இதனை ஐ பி டி ஏ தொண்டுநிறுவன திருவள்ளூர் மாவட்ட தன்னார்வ தொண்டு நிறு வனங்களின் கூட்டமைப்பு தலை வர் ஏ. குமார், மலரும் மொட்டுக்கள் டிரஸ்ட் பூங்குழலி, வேர்ல்ட் டிரஸ்ட் டைரக்டர் ஜெயஸ்ரீ பரசுராமன், ஸ்கை லைட் பவுண்டேஷன் இயக் குனர் கே உதயகுமார்,ஐ பி டி ஏ செயலாளர் அமரன், எம் எம் சி தொண்டு நிறுவனத்தின் தங்க தேவன், உள்ளிட்டோர் இணைந்து பராமரிப்பு பணிகளை மேற்கொ ண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *