திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71–வது பிறந்த தினத்தை முன்னிட்டு, உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி சங்கோதி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் தலைமையில் செல்வம், அமிர்தலிங்கம், தேவா, குமார், அருணாசலம், குரு, குமரன் உள்ளிட்ட 30–க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சிக்கு சென்றவர்கள் “தாய்க்கழகம்” திரும்பும் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதி திமுக பொறுப்பாளரும், பொதுக்குழு உறுப்பினருமான எஸ். கோபால் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் “தாய்க்கழகம்” திரும்பியவர்களுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றார்.
தொடர்ந்து, பெண்களுக்கு புடவையும், ஏழை, எளியோர்க்கு பிரியாணியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், வர்த்தகர் அணி துணைத் தலைவர் குரு என்கிற சண்முகசுந்தரம், தொண்டர் அணி துணைத் தலைவர் மதனா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமிஎட்வின், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் அன்பழகன், தொகுதி துணைச் செயலாளர் கண்ணதாசன், சொல்தா ரவி, பாபு, முஸ்தபா, அசோக், ரீகன், ரஜினி, பிரபு, குணா, விமல், சரவணன், சுகுந்த், ராகுல், கோபி, பரத், பிரவீன், ராகுல், சத்யா, சுப்ரமணி, பிரகாஷ், அன்பழகன், திருநாவுக்கரசு, சந்திரன், இளவரசன், செந்தில் சண்முகம், திருமுருகன், சக்திகுமரன், அமுல், எமில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.