வலங்கைமான் ஒன்றியத்தில் ஐந்து வயது நிறைவடைந்த மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் பணி தீவிரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்த, சேர்க்கை பணியை உடனடியாக தொடங்க கல்விக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 2024- 25 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் ஒன்னாம் தேதி தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

அதன்படி கோடை விடுமுறைக்கு முன்னரே பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கையை முடித்திட கல்விக் கல்வித் துறை திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மூணு முதல் ஐந்து வயது உடைய குழந்தைகள் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோர் முன் பருவ கல்வி பயின்று வருகின்றனர்.

இதில் ஐந்து வயது நிறைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தலைமையில் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்கரை ஆலத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை முகாமை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.

முகாமில் 15 மாணவர்கள் தென்கரை ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஒன்றியம் முழுவதும் நடைபெற்ற மாணவர் சேர்க்கை முகாமில் இதுவரை 135 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சேர்க்கை முகாமில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி, அன்பழகன், வட்டார வள மையமேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், தலைமையாசிரியர் மலர் விழி, இல்லம் தேடி கல்வியின் வட்டார ஒருங்கிணைப்பாளர் நிர்மல், ஆசிரியர் ராஜேஷ், ஆசிரிய பயிற்றுநர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *