அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ மஞ்சமலை ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் வருடாந்திர பங்குனி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது.

9 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் முதல் நாள் 19.03.2024. செவ்வாய்க்கிழமை அன்று கும்மி பாட்டு கலைநிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கி வெள்ளிக்கிழமை பூசாரிக்கு காப்பு கட்டி அதன் பின் நேர்த்திக்கடன் செலுத்துபவர்களுக்கு காப்பு கட்டுதல் சனிக்கிழமை பிடிமண் கொடுத்தல் மற்றும் காமாட்சி குடும்பத்தார் கும்மி பாட்டு கலை நிகழ்ச்சி ஊத்துக்காடு சென்று தீர்த்தம் எடுத்து வந்து ஸ்ரீ கன்னிமார் கருப்பசாமி கோவில் பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனையும் அன்று இரவு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அடுத்த நாள் செவ்வாய்கிழமை மாலை வனதேவதைகளுக்கு பழம் வைத்து ஸ்ரீ விநாயகர், காளியம்மன், முத்தாலம்மன் கோவில்களில், அபிஷேக ஆராதனை செய்து மஞ்சமலையாண்டிகோவிலில் பொங்கல் அபிஷேக ஆராதனை செய்த பின் வன பூஜை நடைபெற்றது

அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சியின் நடைபெற்றது. அடுத்த நாள் புதன் கிழமை இரவு 10.30 மணி அளவில் முத்தாலம்மன் கண் திறக்கின்ற இடத்தில் உள்ள மேடையில் எழுந்தருளி கண் திறந்து ஆடை ஆபரண அலங்காரம் செய்து வானவேடிக்கையுடன் ஆலயம் வந்து சேறுதல் பின்னர் மேளதாளங்கள் முழங்க மாவிளக்கு, முளைப்பாரி, எடுத்தல் அடுத்த நாள் காலை முத்தாலம்மன் கோவிலில் பால்குடம் அக்கினிசட்டி எடுத்தல் அங்கபிரதட்ஷணம் செய்தல் அன்று பகல் 12 மணி அளவில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டி மாலை அம்மன் பூஞ்சோலை புறப்படுதல் நிகழ்ச்சியும் அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மாபெரும் அன்னதானமும் நடைபெற்றது

அடுத்த நாள் காலை மஞ்சள் நீராடுதல் பல்லயம் பிரித்தல் பிரசாதம் வழங்குதல் உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மறவபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *