அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் குமாரம் பகுதியில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அதனை தொடர்ந்து மெய்யப்பன்பட்டி, வலசை, அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாடிவாசல் பகுதியில் வாக்கு சேகரித்தார் அப்போது வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்

அப்போது அவர் பேசியது என்னை வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தாள் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட அலங்காநல்லூர் பகுதிக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவைப் படுகிறதோ அதனை மத்திய அரசிடம் இருந்து பெற்று தருவேன் 100 நாள் வேலை செய்யும் பெண்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கவும் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கும் வழிவகை செய்யப்படும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை குறைக்க வழிவகை செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பள்ளி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுகவின் இரும்பு கோட்டை இங்கே வந்திருக்கும் மக்கள் பார்த்தாலே இரட்டை இலை வெற்றி பெற்றதாக தெரிகிறது. என்று கூறினார் அவருடன் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, மகேந்திரன், ஜக்கையன், கதிரவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்பார்த்திபன், அலங்காநல்லூர் அதிமுக ஒன்றிய செயலாளர்,கல்லணை ரவிச்சந்திரன், நகர செயலாளர் அழகுராஜ், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர்ராதாகிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், இளைஞர் பாசறை செயலாளர் உமேஷ் சந்தர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் லெட்சுமி, நகர இணைச் செயலாளர்புலியம்மாள், நகரதுணைச் செயலாளர்லதா, பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜன்,வார்டு செயலாளர்கள் சுந்தர்ராகவன், கேபிள்பாஸ்கரன், வெள்ளைகிருஷ்ணன், கணேசன், ஆறுமுகம், வலசைகார்த்திக், குருணிபாஸ்கரன், நகர பிரதிநிதிமுரளி,மகளிர் அணி நிர்வாகி பாண்டிச்செல்வி,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், விவசாய அணி ஆர்.பி. குமார், தொழிலதிபர் முத்துக்கிருஷ்ணன், மற்றும் மனோகரன், புலிபாண்டியன், ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு அருகே உள்ள கிராமங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு சென்றனர்..

அவர்களுடன் கூட்டணி கட்சிகளான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொகுதி பொறுப்பாளர் அப்துல் ரகுமான், தேமுதிக ஒன்றிய செயலாளர் சிவா, மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சி புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *