தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வு
விருதாச்சலம்
நேற்று 28.03.24 வியாழன் இரவு 9:45 க்கு மேல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வட்டம் முடப்பள்ளி பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் வான் நோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத் துணைத் தலைவர் தனலட்சுமி வானியல் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருள்மொழி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.