வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்துக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. தேர்தலில் பணம் பட்டுவாடா உள்ளிட்டவைகளை கண்காணிக்கும் பொருட்டு பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் நாடாளுமன்றம் மற்றும் நன்னிலம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனைகள் மேற்கொள்ளும் விதமாக பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வலங்கைமான்- மன்னார்குடி சாலையில் முருக பாஸ்கரன் தலைமையில் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனங்களை மறித்து பணம் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்று சோதனை நடத்தியதோடு, உரிய அனுமதி பெறாமல் காரின் முன் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்சிகளின் கொடிகளை அகற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *