மதுரையில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி
திறந்து வைத்தார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார் பில் போட்டியிடும் டாக்டர் சரவணனின் தேர்தல் அலுவல கம் கே.கே.நகர் பூங்கா அருகே அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தேர்தல் அலுவலகத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார்.

முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், பார்வர்டுபிளாக் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.தே.மு. தி.க. கூட்டணி ஏற்பட்டதையடுத்து நிர்வாகி கள், தொண்டர்கள் எழுச்சியோடு செயல்
பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க.கூட்டணிக்கு 2 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் ஒரே அலைதான் வீசுகிறது. அந்த அலை எங் கள் பக்கம் சிறப்பாக வீசுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் என்னென்ன சாதனைகள் செய் தோம், இனி என்னென்ன செய்யப்போகி றோம் என மக்களிடம் கூறுவதால் மக்கள் எங்கள் கூட்டணியை விரும்புகிறார்கள்.
பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கள்ளக் கூட்டணி வைத்துள்ளது என முதல்-அமைச்சர் விமர்ச மர்சனம் செய்வது குறித்து அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். எத்தனையோ கட் சிகள் உள்ளன.

இப்படி யாரும் பேசுவது கிடையாது. தேர்தல் சமயத்தில் கூட்டணி அமைக்கிறார்கள். பின்னர் கூட்டணியில் இருந்து வெளியேறுவது அந்தந்த கட்சிகளின் விருப்பம்.நாங்கள் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி வந்த பிறகு, வேண்டுமென்றே திட்ட மிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அ.தி.மு.க. மீது அவதூறு பிரசாரம் செய்து வருகிறார்கள் ஒருவேளை தோல்வி பயத்தின் – காரணமாக அவர்கள் இவ்வாறு பேசலாம். அ.தி.மு.க. கூட்டணி தர்மத்தை தர் கடைபிடிக்கும். பா ஜனதா தவறு செய்தால் அ.தி.மு.க. தட்டி கேட்கும். கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி கட்சியை விமர்சனம் செய்யக்கூடாது.

அப்படி விமர்சனம் செய்தால் அது உள்ளடி வேலை செய்வதாக அர்த் தம்.அதுதி.மு.க.வுக்கு கைவந்த கலை. எங்களுடன் கூட்டணி சேருபவர்கள் யாராக இருந்தா லும் அ.தி.மு.க. என்றைக்குமே விசுவாசமாக இருக்கும். தமிழ் நாட்டு மக்களுக்கு பாதிப்பு வருகிற திட்டங்களை கடுமை யாக எதிர்ப்போம். அ.தி.மு.க.வுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக ஊடகம் மூலம் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

உண்மைநிலை களத்தில் அப்படி இல்லை. அ.தி.மு.க.வுக்கு தான் மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. பிரதமரை எதிர்ப்பது போன்று தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.
தேர்தலில் நிற்க பணம் இல்லை என நிர் மலா சீதாராமன் கூறி இருப்பது அவருடைய சொந்த பிரச்சினை. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து 5 பன்னீர் செல்வம் தேர்தலில் நிற்கி றார்கள் என்கிறார்கள்.

அந்த 5 பேரும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள் தானே ? தகுதி உள்ளவர்கள் நிற்கலாம். அ.தி.மு.க.வில் 2 | கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு.அதுஎடப்பாடி பழனிசாமியின் தனிப் பட்ட முடிவு அல்ல என அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *