பாபநாசம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு லட்சத்து 37-ஆயிரத்து 525-ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை குழுவினர்..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை வீரமணி தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அம்மாபேட்டையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மன்னார்குடியை சேர்ந்த, அம்மாபேட்டையில் இயங்கி வரும் பாவை என்ற நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஆனந்த் என்பவர் இரண்டு லட்சத்து 37-ஆயிரத்து 525-ரூபாய் பணம் எடுத்து சென்றதை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அதனை சீல் வைத்து, பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மணிகண்டன் இடம் ஒப்படைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *