கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் நடப்பு கோடை பருவத்தில் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்வதற்கான, கோடை சாகுபடி சிறப்புத்திட்டமானது தற்போது வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை பற்றி கணக்கம்பட்டி கிராமத்தில் ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனைவர் இரா. கருப்பையா விவசாயிகளிடம் கூறும்போது,
ஊத்தங்கரை வட்டாரத்தில் கம்பு, துவரை, உளுந்து, பாசிப்பயறு, எள் மற்றும் நிலக்கடலை போன்ற குறைந்த கால பயிர்களை கோடை பருவத்தில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். கோடையில் மாற்றுப்பயிராக பயறு வகைப்பயிர்களை சாகுபடி செய்யும் போது, காற்றில்லுள்ள தழைச்சத்தினை கிரகித்து வேர்முடிச்சுகளில் சேகரிக்கப்பட்டு மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது.

அதே போல், குறைந்த வயதில் அதிக நீர் தேவையின்றி குறைந்த செலவில் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டக்கூடிய எள் பயிரையும், கோடையில் சாகுபடி செய்யலாம், எள் பயிரானது அனைத்து வகை மண்ணிலும் நன்றாக விளையக்கூடியது.

நிலக்கடலை பயிரினை நல்ல நீர் ஆதாரம் உள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் பயிரிட்டு நல்ல லாபம் ஈட்டலாம். எனவே திறந்த வெளிக்கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நீர் ஆதாரம் உள்ள விவசாயிகள் மற்றும் நுண்ணீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் வசதி உள்ள விவசாயிகளும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்குள் எள் நிலக்கடலை மற்றும் துவரை போன்ற பயசிர்கள் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம்.

மேற்கண்ட பயிர் சாகுபடிக்கு தேவையான நிலக்கடலை உளுந்து, மற்றும் துவரை போன்ற பயிர்களுக்கான விதைகள் மானிய விலையில் ஊத்தங்கரை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ளன. மேலும் அசோஸ் பைரில்லம் ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா, ஜிங்க்பாக்டீரியா, பொட்டாஷ்பாக்டீரியா, போன்ற உயிர் உரங்களையும் சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோ டெர்மாவிரிடி போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளும் மானியவிலையில் ஊத்தங்கரை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *