எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
சீர்காழி
சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அஇஅதிமுக தேர்தல் அலுவலகத்தை மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் பாபு தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதனை அடுத்து புதிய பேருந்து நிலையம் அருகில் சீர்காழி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரின் தந்தையுமான பவுன்ராஜ் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதனை எடுத்து எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதி,மா.சத்தி,பொறியாளர் மார்க்கோனி மற்றும் தோழமைக் கட்சியினர் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்