தென்காசி
தென்காசி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் யு எஸ் பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் தின விழா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் செல்வராஜ், பள்ளி செயலர் சகாய செல்வமேரி ஆகியோர் தலைமை வகித்தனர்.
துணை முதல்வர் அபுதாஹிர் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் நடனம், பைபிள் வாசித்தல், பாட்டு மற்றும் பேச்சு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கிறிஸ்மஸ் தாத்தாக்களின் கண்கவர் நடனம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. பள்ளி முதல்வர் அந்தோணி பால்ராஜ் தனது சிறப்புரையில் அன்பு செய்யுங்கள், எதிரிகளையும் நேசிக்க வேண்டும், மற்றவர்களின் தவறுகளை மன்னிக்க வேண்டும் என்று மாணவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
இறுதியில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் கேக் வழங்கி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி தாளாளர் மற்றும் செயலர் சிறப்பாக செய்திருந்தனர்.