தந்தை பெரியாரின் 52வது நினைவு நாளை முன்னிட்டு துறையூரில் திராவிடர் கழகத்தினர் வீரவணக்கம் செலுத்தினர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் தந்தை பெரியாரின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு துறையூர் திராவிடர் கழகம் சார்பில் 24.12. 25 புதன்கிழமை காலை 9. 30 மணியளவில் துறையூர் பேருந்து நிலையம் மற்றும் புதிய வீட்டு வசதி வாரியம்,கண்ணனூர் சமத்துவபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன் தலைமையில் பெரியாரின் திருவுருவ படங்கள் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு,மாநில ப. க. அமைப்பாளர் அ. சண்முகம், மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி, செயலாளர் செ. செந்தில் குமார்,துணை தலைவர் த.ரஞ்சித் குமார், துணை செயலாளர் சு. சரண் ராஜ், இளைஞரணி லோகநாதன், மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ், மாவட்ட ப. க. தலைவர் பெ.பாஸ்கர்,மாவட்ட ப. க. செயலாளர் பி. பிரபு,நகர திராவிடர் கழக தலைவர் ந.இளையராஜா,ஒன்றிய திராவிடர் கழக தலைவர் இர.வரதராஜன்,மாணவரனி ம.இனியன்சம்பத்,நகர இளைஞரணி தலைவர் பொ.முரளி,பொதுக்குழு உறுப்பினர் பெ. பாலகிருஷ்ணன்,கோர்ட். எம். ஆர். சந்திர போஸ், உப்பிலியபுரம் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் மாராடி எம். ஏ. இ ரமேஷ், மாவட்ட ப. க. துணை செயலாளர் எஸ்.என்.புதூர். கருணாகரன்,மாவட்ட மாணவரணி தலைவர் ரெ. தன்ராஜ்,செயலாளர் சே. விஷ்ணு வர்தன்,நகர மாணவரணி தலைவர் ச. சர்ஜுன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காவியா ஆகியோர் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் திருவுருவ படங்களுக்கும் , சிலைக்கும் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்