பெரம்பலூர்.டிச.25. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் வெ.கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மற்றும் பலர் உடனிருந்தனர்.