கோவை

ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் பாஜகவிற்கு முழு ஆதரவு – கோவையில் நிர்வாகிகள் பேட்டி..

கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.இதற்கு பல்வேறு தரப்பினரும் கட்சியினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நிலையில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் ,அண்ணாமலைக்கு இந்த தேர்தலில் முழு ஆதரவை கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.முன்னதாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் அண்ணாமலையை சந்தித்த ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு அங்கத்தினர்கள் கும்ப மரியாதை செலுத்தி வரவேற்று தங்களது பிரச்சாரத்தை தொடங்கினர்.

தொடர்ந்து கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் கலிபோர்னியா சுவாமிநாதன் சிவம் வழிகாட்டுதலில் பேரில் கோவை மாவட்ட தலைவர் மணிகண்டன் சிவாச்சாரியார் தலைமையில் , செயலாளர் செல்வம் சிவாச்சாரியார், பொருளாளர் யோக கணபதி சிவாச்சாரியார், அமைப்புச்செயலாளர் செந்தில்நாதன் சிவாச்சாரியார் ,துணைச் செயலாளர் கண்ணன் சிவாச்சாரியார், துணைத்தலைவர் பேரூர் மணிவாசகம் சிவாச்சாரியார், இணைச்செயலாளர் சிவராஜ் சிவாச்சாரியார், துணைச் செயலாளர் சபரிநாத சிவாச்சாரியார், செல்வகணபதி சிவாச்சாரியார், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் சிவம் மற்றும் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் துர்கா மகாலட்சுமி, அலுவலக மேலாண்மை கார்த்திகேயன், கோவை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *