வலங்கைமானில் 94 ஆவது உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 94-வது உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை
குழுவினருக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் டி சி டி யூ தொழிற்சங்க நகரத் தலைவர் அகமது மொய்தீன், காங்கிரஸ் வலங்கைமான் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி, திமுக வலங்கைமான் நகர செயலாளர் பா. சிவனேசன் ஆகியோர் முன்னிலையில், பாதயாத்திரை குழுவை தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்டத் தலைவர் குலாம் மைதீன் வரவேற்றார்.

முன்னதாக பாதயாத்திரை குழுவின் மாநில தலைவர் ஆறுமுகம், குழுவின் தலைவர் சக்தி செல்வ கணபதி ஆகியோர் மகாத்மா காந்தி, காமராஜர் ஆகியோர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்தப் பாதயாத்திரை, அதன் அவசியத்தை பற்றி பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் விளக்கி பேசினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அரவத்தூர் மணி, காங்கிரஸ் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், திருவாரூர் நகர தலைவர் ரவி, அப்துல் ரகுமான் மற்றும் பாதயாத்திரை குழுவினர்கள், காங்கிரஸ்தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் அனைவருக்கும் நன்றி கூறினார். வலங்கைமான் கடைவீதியில் பாதயாத்திரை குழுவினர் பேரணியாக மகாத்மா காந்தியின் புகழ், கர்மவீரர் காமராஜ் ஆகியோரின் புகழ் போன்ற கோஷங்களை சொல்லிக்கொண்டே பேரணியாக வந்தனர். பின்னர் பாதயாத்திரை குழுவினர் ஆலங்குடி வழியாக நீடாமங்கலம் நோக்கி சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *