மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தகவல்

19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள். உணவு நிறுவனங்கள். மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள். அனைத்து வங்கி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 135(B) இன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மக்களவை தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று விடுமுறை அளிக்கப்படாதது தெரிந்தால் அது தொடர்பான புகார்களை ஏப்ரல் 18-ஆம் தேதியே தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற புகார் எண் அல்லது கடலூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண். 04142-225984, கடலூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ம.ஞானபிரகாசம் 9442832201, கடலூர் தொழிலாளர் துணை ஆய்வாளர், . வி.பி. விஜயலட்சுமி 9047536734 மற்றும் கடலூர், முத்திரை ஆய்வாளர், வை. கருணாநிதி 6380819227 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *