வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் காமாட்சி அம்மன் கோவில் காமாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முக்கிய விழாவான சடல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே சந்திர சேகரபுரம் கிராமத்தில் பழமையான ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை செடில் திருவிழா கடந்த 12 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது.

நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவினை செட்டில் திருவிழா இன்று நடைபெற்றது. இன்று மாலை நடைபெற்ற விழாவில் பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து காமாட்சி அம்மன் வீதி உலா நடைபெற்றது முன்னதாக ஆலயத்தில் உள்ள காமாட்சி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது விழாவை காண சந்திரசேகரபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். வீரமணி சிவாச்சாரியார் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *