முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிசார்பில் கோரிக்கை……

தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு IFHRMS மென்பொருள் மூலம் சம்பளப்பட்டியல் தயாரிக்கப்பட்டு
சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

வருமான வரிப் பிடித்தமானது ஒவ்வொரு நிதியாண்டின் பிப்ரவரி அல்லது மார்ச் மாத இறுதியில் மொத்த வருமான வரியையும் கட்டி முடித்த பிறகே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் முறை நடப்பில் இருந்து வருகிறது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்-2024 முதல் இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு கடைசியாக அவர்கள் கட்டிய வருமான வரி அடிப்படையில் மாத ஊதியத்தில் இந்த IFHRMS மென்பொருள் தானாக பிடித்தம் செய்து கொள்ளுகின்ற முறையை மாநில கருவூல ஆணையம் கொண்டு வந்துள்ளது.

இந்த நடைமுறையால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வருமான வரி பிடித்ததில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
வருமான வரி புதிய கணக்கீட்டு முறை மற்றும்
பழைய கணக்கீட்டு முறை என்ற இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதுபுதிய கணக்கீட்டு முறையில் எந்த விலக்கும் கோர முடியாது.பழைய கணக்கீட்டு முறையில் விலக்கு கோர முடியும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு கடனின் அசல் மற்றும் வட்டியை கழித்துக் கொள்ளுகின்ற நடைமுறை உள்ளது.

மேலும், ஓர் ஆசிரியர் மற்றும் அரசு பணியாளரின் வருமானம் ஒரு நிதி ஆண்டில்
ஐந்து லட்சத்திற்கும் குறைவு எனில் அவர்களுக்கு
வருமானவரி விதி விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட விவரங்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் IFHRMS மென்பொருள் மூலமாக ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர் களுக்கும் அவர்களிடத்தில் வருமான வரி பிடித்தம் செய்வதற்கு விருப்பத்தை கேட்காமல் வருமான வரியை பிடித்தம் செய்வது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை பறிக்கின்ற செயலாகவே எங்களது அமைப்பு கருதுகிறது.

மேலும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டுக் கடன் உள்ளிட்ட தனிப்பட்ட வங்கி கடனை மாதாந்திர தவணையில் செலுத்தும் நிலையில் இருந்து வருகின்றனர்.

வருமான வரி பிடித்தமானது அந்த நிதி ஆண்டின் வருமானத்திற்கு அதிகமாக பிடித்தம் செய்யப்பட்டால் கூடுதலாக செலுத்திய வருமான வரி தொகையை மீண்டும் பெறுவதற்கு அந்த நிதி ஆண்டு முடிந்து அடுத்த நிதி ஆண்டின் ஜூலை-31 வரை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கடன்களுக்காக தங்களுடைய மாத சம்பளத்தில் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்காக தவணை முறையில் பணம் செலுத்த இருப்பதால், தற்போது IFHRMS முறையில் வருமான வரி பிடித்தம் வருமானத்திற்கு அதிகமாக பிடித்தம் செய்யப்படுவதால் வாங்கும் சம்பளம் (take home salary) குறைவாக இருக்கும் நிலை ஏற்படும். Take home salary குறைவாக பெறும் நிலை என்பது அரசு விதிகளுக்கு புறம்பான நிகழ்வாகும்.

எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் கடந்த ஆண்டுகளில் உள்ள நடைமுறையை
மீண்டும் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு முதல்வர்
இப் பிரச்சனையில் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு சரி செய்ய வேண்டுமென ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச்செயலாளர்பெ. சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *