அரியலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த மார்ச் 2024 ஆண்டு பொதுத்தேர்வினை 90 பள்ளிகளைச் சேர்ந்த 8218 மாணவ/மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3917 மாணவர்களும், 4301 மாணவிகளும் தேர்வு எழுதினர்.

54 அரசு பள்ளிகளில் 2323 மாணவர்களும், 2214 மாணவிகளும் ஆக மொத்தம் 4537 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2199 மாணவர்களும், 2138 மாணவிகளும் ஆக மொத்தம் 4337 தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 95.59 ஆகும்.

9 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 538 மாணவர்களும், 863 மாணவிகளும் ஆக மொத்தம் 1401 பேர் தேர்வு எழுதினர். இதில் 538 மாணவர்களும், 863 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 100 ஆகும்.

2 அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 39 மாணவர்களும், 40 மாணவிகளும் ஆக மொத்தம் 79 பேர் தேர்வு எழுதினர். இதில் 39 மாணவர்களும், 40 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும்.

16 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 737 மாணவர்களும், 635 மாணவிகளும் ஆக மொத்தம் 1372 பேர் தேர்வு எழுதினர். இதில் 736 மாணவர்களும், 635 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.93 ஆகும்.

9 சுயநிதி மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற 155 மாணவர்களும், 73 மாணவிகளும் ஆக மொத்தம் 228 பேர் தேர்வு எழுதினர். இதில் 155 மாணவர்களும், 73 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும்.

அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 97.25 ஆகும். மேலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப்பள்ளி – 23, அரசு உதவிபெறும் பள்ளி – 6, மெட்ரிக் பள்ளி – 15, சுயநிதி பள்ளி – 9 ஆக மொத்தம் 53 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *