ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரி கனவு என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி உயர்கல்வி கல்வி படிப்பை தேர்வு செய்ய ஏதுவாக சிறந்த கல்வியாளர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் தங்களின் எதிர் கால கனவினை நனவாக்கும் வகையில் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். பிளஸ்- 2 முடித்து அடுத்து என்ன படிக்கலாம். உங்கள் கனவுகளை நனவாக்கும் படிப்புகள். உயர்கல்விக்குச் செல்ல ஏராளமான உதவித்தொகை வாய்ப்புகள், தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள், சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியில் என்ன படிக்கலாம். வருங்காலத்தை வளப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதையும்,
அதேபோல கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள். போட்டித்தேர்வுகள் மற்றும் தொழில் வழிகாட்டல், ஊக்கப்படுத்துதல், வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை பெறுதல் போன்ற விவரங்கள் புகழ் பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டப்படுகிறது.
இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியால் மாணவர்கள் தங்களது எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும். வெற்றி பெறவும் வழிவகை செய்யும். மேலும் மாணவர்கள் தோல்விகளை. வெற்றிகளின் தொடக்கமாக எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும்.பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் வரும் காலங்களில் எந்த கல்லூரியில் என்ன படிக்கலாம். உதவித்தொகை என்பன உள்ளிட்ட தகவல்களை
தெரிந்து கொண்டு உயர்கல்வியை தேர்ந்தெடுத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்.என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பாதேவி
மாணவ, மாணவியர்களிடம் தெரிவித்தார்கள்இந்நிகழ்ச்சியில்உயர்கல்வி வழிகாட்டுநர் மதி ஆதிதிராவிடர் நலவட்டாட்சியர் தேவராஜ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாத்குமார் உத்வேகப் பயிற்சியாளர் பெலிக்ஸ் மற்றும் மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *