தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு, பகல் பாராமல் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது,

யார், யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டுபிடித்து, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தும், அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கம் செய்தும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தனியாக அறிவிக்கப்பட்டுள்ள 8300014567 மற்றும் 9514144100 ஆகிய எண்களை தொடர்புகொண்டு காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தை போதைப் பொருள் இல்லாத மாவட்டமாகவும், குற்றமில்லாத மாவட்டமாகவும் உருவாக்குவதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா காவல் துணை கண்காணிப்பாளர்கள் திருச்செந்தூர் வசந்தராஜ், மணியாச்சி லோகேஸ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், ஸ்ரீவைகுண்டம் மாயவன், விளாத்திகுளம் ராமகிருஷ்ணன் உட்பட சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *