கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்;-தென்பொதிகை வியாபாரிகள் சங்கம் தீர்மானம்;-

தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டியில் வைத்து, தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணைத்தலைவர் பழக்கடை சுலைமான், பொருளாளர் பாக்யராஜ் முன்னிலை வகித்தனர்.செயலாளர் நவாஸ்கான் வரவேற்றார்.
துணைச்செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் கடையம், பொட்டல்புதூர் நகருக்குள், மிகவும் குறுகிய சாலை என்பதால், கேரளாவுக்கு கனிமங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகிறது. மேலும் தண்ணீர் குழாய்கள் உடைப்பு, ரோட்டடி வீடுகள் குலுங்குவது உள்ளிட்ட பல்வேறு அவதிக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே கேரளாவுக்கு கனிமங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை, தென்காசி, நெல்லை நான்கு வழிச்சாலை வழியாக, மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என்றும்,வருகிற 5.5.24 வணிகர் தினத்தை முன்னிட்டு, முதலியார்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடத்துவது என்றும்,குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக, ரவணசமுத்திரம் விலக்கு அருகில், கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் யூசுப், பிச்சையா, தங்கையா, முகைதீன் பிச்சை, அலி, காமராஜ், காதர், ராஜா, மீரான், ஹெர்லின் ஜெபராஜ்,பூசைக்கனி, காலித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *