சென்னை புழல் ஜிஎன்டி சாலையில் உள்ள புழல் ஒன்றிய ஊராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு புள்ளிலையன், விளாங்காடுபாக்கம் ,தீர்த்தங்கரையம்பட்டு, கிரான்ட்லையன் ,அழிஞ்சிவாக்கம் ,சென்றம்பாக்கம் ,வடகரை போன்ற ஏழு ஊராட்சிகளுக்கான அலுவலகப் பணிகள் இங்கு நடக்கும்.

இந்த அலுவலகத்தில் நில உறுதிப்படுத்துதல் சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை‌ டி.எஸ்.பி சம்பத்துக்கு கிடைத்த தகவலில் நேற்று அதிரடியாக மதியம் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட பத்து போலீசார்கள் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்து தீடீரென அலுவலகத்தை சோதனை செய்தனர்.

ஒவ்வொரு அறையாக சோதனை செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர் என்பவர் அறையிலும் சோதனை மேற்கொண்டனர் . பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிபுரியும் அறையில் இருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணத்தை கண்டெடுத்து அந்த பணம் இங்கு எப்படி வந்தது யார் மூலமாக பெறப்பட்டது புரோக்கர்கள் மூலமாக வாங்கப்பட்டதா என துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஆவணங்கள் பிரிண்ட் எடுக்க பயன்படுத்தப்படும் பிரிண்டர் மற்றும் நில உறுதிப்படுத்துவதற்கான பதிவுகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்கின்ற பதிவு அடங்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது முதலாவதாக வெளியே உள்ள இரும்பு கதவு மூடப்பட்டது வெளியிலிருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தில் உள்ளே பணியில் இருந்த யாரையும் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

இதன் காரணமாக அலுவலகத்தை சுற்றி இருந்த பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்வதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அலுவலகப் பணிகள் முடங்கியது.

மாலை மூன்று மணியளவில் ஆரம்பித்த இந்த சோதனை நள்ளிரவு 12 மணிக்கு நிறைவு பெற்றது .இதில் 1 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர் தவறு செய்திருந்தால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றிய பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இது சம்பந்தமாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *